இங்கே
நீங்கள் படிக்கப் போவது, 1993-ம் ஆண்டு செப்டம்பர் 12 தேதியிட்ட ஆனந்த
விகடன் இதழில், மதனுக்கு ரஜினிகாந்த் அளித்த பேட்டி. இந்தப் பேட்டியில்தான்
முதல் முறையாக இந்திய அரசியல் அமைப்பின் 'டோட்டல் சிஸ்டமே மாறணும்' என்று
ரஜினி கூறியுள்ளார். அப்போது முதல்வராக இருந்தவர் மறைந்த ஜெயலலிதா.
ரஜினிக்கும் அவருக்கும் மோதல் ஆரம்பிக்கக் காரணமான அந்தப் பேட்டியின் ஒரு
பகுதி இது.
மதன்:
'வள்ளி' படம் மூலமா உங்க அரசியல் கண்ணோட்டத்தைச் சொல்லப்போறதா முன்பு
சொன்னீங்க. ஒரு வேளை, படத்துல வர்ற நல்ல முதலமைச்சர் மாதிரி நீங்க..?
ரஜினி: இப்படியெல்லாம்
என் ரசிகர்கள் வெறியா எதிர்பார்க்கறாங்கன்னு எனக்குத் தெரியும். ஆனால்,
எனக்கு அரசியலுக்கு வர விருப்பமில்லே. காரணம், யார் இங்கே முதல்வரா வந்து
உட்கார்ந் தாலும் எதுவும் பண்ணமுடியாது. நல்லது நடக்காது. நடக்க
விடமாட்டாங்க! இந்த நிலைமையில, புரட்சி வர்றதுதான் ஒரே வழி! மகாத்மா மாதிரி
இன்னொரு தலைவரை இந்தத் தேசம் பார்க்கணும். அப்பத்தான் சரிப்படும்!
மதன்: ஏன்... தற்போது இருக்கிற அரசியல் சுற்றுப்புறச்சூழல் சரியில்லைங்கறீங்களா?!
ரஜினி: ஆமாம்!
இப்போ அரசியல் தீவிர புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கு. இதுக்கு மருந்து
மாத்திரையெல்லாம் பத்தாது. அறுவை சிகிச்சைதான் ஒரே வழி! இந்திய அரசியல்
அமைப்பு மொத்தமாக மாற ணும். அது மாறினாலொழிய, மாநில அளவில் எதுவும் செய்ய
முடியாது! பெரிய விஷயம் இது. அதை மாற்றி அமைக்கறது என் கையில் இல்லை.
மதன்: அரசியல் மாற்றம் எந்த விதத்தில் நடக்கணும்னு எதிர் பார்க்கறீங்க?
ரஜினி:
நமக்கு ஒரு டிக்டேட்டர் வேணும். அவர் நல்லவரா, பொது நலத்துக்குப்
பாடுபடறவரா இருக்கறது ரொம்ப முக்கியம்! மாநில அரசுகளுக்கு எவ்வளவு கம்மியான
அதிகாரம் இருக்குன்னு உங்களுக்கே தெரியும். நல்லது செய்ய நினைச்சாலும்
செய்ய விட மாட்டாங்கன்னும் தெரியும். இந்த நிலைமைல, டிஸிப்ளினுக்கு ஒரே வழி
எமர்ஜென்ஸிதான்! நாடு மொத்தமும் முழுமையான எமர் ஜென்ஸி கொண்டு வந்துடணும்.
அப்படியரு அவசர நிலைப் பிரகடனம் உருவாகணும்னா, மத்தியில் முழுமையான மெஜா
ரிட்டி இருக்கணும். முழுமையான மெஜாரிட்டி பலத்தோடு மத்தியில் உட்கார்ந்து
கோலாச்சுற அந்தத் தலைவர் அசாத்திய மூளைத்திறன் கொண்டவராக இருக்கணும்.
மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படற நிஜமான தலைவரா அவர்
இருக்கவேண்டியது அவசியம். இதெல்லாம் நடந்தாத் தான் இந்த நாடு உருப்படும்!
மதன்: அப்படியரு நிலை வந்தால், நீங்க நேரடியா அரசியல்ல சேருவீங்களா?
ரஜினி: சத்தியமா! அப்படி யரு நிஜமான தலைவர்கிட்டே இந்த நாட்டோட அதிகாரம் போனால், நான்தான் அவருக்கு ஆதரவு தரும் முதல் ஆளா இருப்பேன். அப்போ யாரும் கூப்பிடாமலே, தாராளமா அரசியலுக்கு வர நான் தயார். அதுவரைக்கும் இப்படி மாநில அரசியலுக்கெல்லாம் என் பெயரை வீணா இழுக்காதீங் கன்னுதான் கேட்டுக்கறேன்.
மதன்: ஒரு கட்டத்தில், படிச் சவங்கள்லாம் அரசியலுக்கு வந்தால் அரசியல் சுத்தப்படும் னாங்க. இப்ப படிச்சவங்க எவ்வளவோ பேர் அரசியல்ல இல்லியா என்ன? ஆனால், அப்படியெதுவும் சுத்தம் நிகழ்ந்ததா தெரியலியே?
ரஜினி: படிச்சவங்க வந்தாலும் மாத்த முடியாது, சார்! இங்கே அரசியலை ரொம்பக் கெடுத்து வைச்சிருக்காங்க. சோடா பாட்டிலும், சைக்கிள் செயினும்தான் இங்கே அரசி யல். படிச்சவங்க வந்தாலும் அந்தச் சாக்கடைக்குள்ளே தான் போயாகணும். இல் லேன்னா, அரசியல்ல குப்பை கொட்ட முடியாது. இங்கே அரசியல்வாதியை மாத்திர மில்லே, இங்குள்ள அரசு அதிகாரிகள் போக்கை, bureaucracy-யை வேற மாத்த வேண்டியிருக்கு. எல்லாத்துக் கும் ஏற்றபடி அரசியல் சட்டங்களையே மாத்தறதுதான் ஒரே வழி! அதனாலதான் ஒட்டு மொத்தமா 'டோட்டல் சிஸ்டமே' மாறணும்னு சொல்றேன்
.
-நன்றி: ஆனந்த விகடன்

No comments:
Post a Comment